போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளுடன் இரண்டு வாலிபர்கள் கைது !
கைது
திருப்பூரில் போதைக்கு பயன்படுத்துவதாக விலை நிவாரண மாத்திரை உடன் இரண்டு வாலிபர்கள் கைது. திருப்பூர் மாநகர பகுதியில் வலி நிவார மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷன் பிரவீன் குமார் அபிநபுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விவேக்குமார் தலைமையிலான தனிப்படையினர் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சூசையாபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்குள்ள ரேஷன் கடை அருகே 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினர்.இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அது என்ன மாத்திரை என்று போலீசார் எடுத்து பார்த்த போது அது வலி நிவாரண மாத்திரை என அறிந்து போலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில் அவர்கள் பல்லடத்தை சேர்ந்த அரிசங்கர், (வயது 23) ராயபுரத்தை சேர்ந்த சாமுவேல் (23) என்பது தெரிய வந்தது. இவர்கள் நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 100 வழி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.