இரண்டு வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
பைல் படம்
சேலம் கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகர் பகுதி சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கார்த்தி (28). இவருக்கு திருமணமாகி அனுசியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த கார்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகார் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் அம்மாபேட்டை விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சீனிவாசன் (25). சேலம் பழைய பஸ் நிலையம் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வரும் இவருக்கு இந்துஜா (23) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சீனிவாசன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஓராண்டுக்கு முன்பே சீனிவாசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.