சேலம் வழியே செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து

சேலம் வழியே செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

சேலம் வழியே செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து என ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருப்பத்தூர்- பங்காருபேட்டை ரயில்வே மார்க்கத்தில் ரயில்வே மேம்பால பணி நடக்கிறது. இதனால் இவ்வழியே இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி எர்ணாகுளம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12683) வரும் 11ஆம் தேதியும், மறு மார்க்கத்தில் இயங்கும் பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12684) வரும் 12ஆம் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16526) வரும் 12ஆம் தேதி மாற்று பாதையாக பெங்களூருக்கு அடுத்த ஓசூர், தர்மபுரி, சேலம் வழியே இயக்கப்படுகிறது. கிருஷ்ணராஜபுரம், ஒயிட்ஃபீல்டு, மாலூர், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது. இத்தகவலை சேர்ந்த ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story