டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து - முதியவர் பலி
விபத்தை ஏற்படுத்திய வேன்
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடராஜா நகர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தன், (75). இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில், கடைக்கு செல்வதாக கூறி, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில், சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சென்ற போது, எதிரில் வந்த ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில், தலை, மார்பு நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து இவரது மகள் ராஜாமணி, (35), குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர் பாலக்காடு, அனில்குமார், (38), கைது செய்யப்பட்டார்.
Next Story