டூ வீலர்கள் மோதல் - மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் காயம்
விருதுநகரில் மாற்றுத்திறனாளி ஓட்டிவந்த வாகனத்தின் மீது மாற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சார்ந்தவர் கலைச்செல்வி,மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் இவர் தனது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய மூன்று சக்கர ஊனமுற்றோர் வாகனத்தில் தனது கணவர் ராமர் தனது மகள் ரக்ஷனா ஆகியோரை பின்னால் அமர வைத்து கொண்டு கலைச்செல்வி வாகனத்தை ஓட்டிக்கொண்டு உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்காக சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சென்ற வாகனம் விருதுநகர் சிவகாசி சாலையில் ஐயங்கார் பேக்கரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது விருதுநகர் பி குமார் முனியாண்டி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி ஓட்டி வந்த வானத்தின் மீது மோதி ஏற்பட்டது இதில் கலைச்செல்வி அவருடைய கணவர் ராமர் ரக்ஷனா மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முனியாண்டி ஆகிய நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் அருகில் இருப்பவர்கள் வீட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story