இருசக்கர மோட்டார் வாகனங்கள் மோதல் - ஒருவர் படுகாயம்

இருசக்கர மோட்டார் வாகனங்கள் மோதல் - ஒருவர் படுகாயம்

காவல்துறை விசாரணை


இருசக்கர மோட்டார் வாகனங்கள் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ஸ்ரீரங்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 38. இவர் ஏப்ரல் 1ம் தேதி மதியம் 3-மணி அளவில்,கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பிச்சம்பட்டி அருகே சென்ற போது, இவரது வாகனத்திற்கு முன்பாக, வெள்ளியணை அருகே உள்ள கே. பிச்சம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற இரு சக்கர மோட்டார் வாகனத்தில் இருந்து எந்த சமிக்கையும் வெளிப்படுத்தாமல், திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த ரமேஷின் இருசக்கர மோட்டார் வாகனம், முத்துக்குமார் ஓட்டி சென்ற மோட்டார் வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரமேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷின் மனைவி ஜோதிமணி வயது 35 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இருசக்கர மோட்டார் வாகனத்தை வேகமாக ஓட்டி, சிக்னலை ஏதும் வெளிப்படுத்தாமல், திடீரென பிரேக் இட்டதால்,விபத்து ஏற்பட காரணமான முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.

Tags

Next Story