இருசக்கர வாகனங்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிழக்குத் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் பூபதி இவரது மகன் விஷ்வா வயது 21, இவர் ஆலம்பாடியில் உள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கீழப்புலியூருக்கு, இரு சக்கர வாகனத்தில்மாத்தி ஏழாம் தேதி காலை ஒன்பது முப்பது மணி அளவில் சென்ற போது, பெரம்பலூர் புறவழிச்சாலையில் ஆதவ் பப்ளிக் பள்ளி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், புலிகரம்பலூர்பகுதியைச் சேர்ந்த, பூமாலை மகன் திருமலை 20, என்பர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விஷ்வா சம்பவ இடத்திலேயே பலத்த அடிப்பட்டு உயிரிழந்தார்.
மேலும் திருமலை காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் இந்த பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த விஷ்வா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.