மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பலி
விபத்து
கடியச்சேரி அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் கடியச்சேரி கிராமத்தில் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் விக்னேஷ். தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மன்னார்குடி சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்சார கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது . இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story