இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரு வயது குழந்தை படுகாயம்
போலீசார் வழக்கு பதிவு
கோவில்பத்து மரவாடி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒரு வயது குழந்தை தலையில் பலத்த காயம்.
கோவில்பத்து மரவாடி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒரு வயது குழந்தை தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. நாகை மாவட்டம் விழுந்தமாவடி புளிய மரத்தடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் வீர மணிகண்டன் வயது 33 இவர் கடந்த 25ஆம் தேதி இரவு 7 45 மணிக்கு தனது ஒரு வயது குழந்தை மகிழினியுடன் இரு சக்கர வாகனத்தில் கோவில் பத்து மரவாடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேட்டைக்காரன் இருப்பு சண்டியன் காடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வீர முருகன் என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒரு வயது குழந்தை மகிழினி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் இரு சக்கர வாகனத்தை போட்டி வந்த வீர முருகன் காலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீர மணிகண்டன் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் மார்ச் 1 வெள்ளிக்கிழமை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story