இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
விபத்து
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமிரசா நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி மார்க்கெட் சென்றார். இந்த நிலையில் ஆண்டிபட்டி மதுரை சாலையில் சென்ற போது இருளாண்டி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகன மோதியதில் தர்மராஜ் பலத்த காயமடைந்தார். இது குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story