இருசக்கர வாகனத்தில் கருங்கல் பதிவெண் பலகை
மாமல்லபுரத்தில், சிற்பியின் ஸ்கூட்டர் வாகனத்தில், பதிவெண் தகடை தவிர்த்து, கருங்கல் பதிவெண்ணை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மோட்டார் வாகனங்களில், முன்புறம் மற்றும் பின்புறம் பதிவெண் இடம்பெற்ற பலகை இடம்பெறுவது கட்டாயம். ஆனால், இந்த பதிவெண் பலகையை உரிமையாளர்கள், தங்கள் விருப்பம்போல் அமைத்தனர்.
தற்போது, புதிய வாகனங்களுக்கு பதிவெண் பலகையை, அரசு வாயிலாக வழங்கப்பட்டு பொருத்தப்படுகிறது. இச்சூழலில், மாமல்லபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற சிற்பி, தன் ஸ்கூட்டர் வாகனத்தில், கருங்கல்லில் பதிவெண் பொறித்து வடித்த பலகையை,முன்புறம் மற்றும் பின் புறம் பொருத்தியுள்ளார். இதை, அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் காண்கின்றனர். இதுகுறித்து அவர் கூறியதாவது: சிற்பி என்ற அடையாளத்திற்காக, வாகன பதிவெண் பலகையை, கருங்கல்லில் வடித்து பொருத்தியுள்ளேன். வெள்ளை நிற தகடில், எண்கள் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது அரசு விதி. அதுபோன்றே பதிவெண் பலகையை வடித்துள்ளேன். இவ்வாறு அவர்கூறினார்.