நீட் விலக்கு கோரி திமுக இளைஞரணியினா் இருசக்கர வாகன பேரணி

நீட் விலக்கு கோரி திமுக இளைஞரணியினா் இருசக்கர வாகன பேரணி

அரூரில் நீட் விலக்கு கோரி திமுக இளைஞரணியினா் இருசக்கர வாகன பேரணி

நீட் விலக்கு கோரி திமுக இளைஞரணியினா் இருசக்கர வாகன பேரணி
தர்மபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானா பகுதிக்கு எழில்மறவன் கோடீஸ்வரன் தலைமையில் வருகை தந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணியை அரூர் நகர செயலாளர் முல்லை ரவி, தலைமையில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். இளைஞர் அணி இருசக்கர வாகன பேரணியில் ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடம்மாள்,பேரூராட்சி துணை தலைவர் சூர்யா, தனபால், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநில இளைஞர் அணி மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் விலக்கு - நம் இலக்கு என்ற முழக்கத்தோடு அரூர் வழியாக சேலம் நோக்கி பயணம் மேற்கொண்டனர் இந்த இருசக்கர வாகனப் பேரணி தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயணம் செய்து தி.மு.க அரசின் சாதனைகள் குறித்தும், நீட் பாதிப்பு குறித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அரூர் பகுதிக்கு வாகன பேரணி வந்தடைந்தது கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story