டூவீலரை களவாடிய மர்மநபர் - காவல்துறை வழக்கு பதிவு !
காவலர் குடியிருப்பு அருகே நிறுத்திய டூவீலரை களவாடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவலர் குடியிருப்பு அருகே நிறுத்திய டூவீலரை களவாடிய மர்மநபர். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா, நாகம்பள்ளி, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தவசீலன் மகன் யுவராஜ் வயது 29. இவர் பிப்ரவரி 25ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் அவரது டூவீலரில் அரவக்குறிச்சி காவலர்கள் குடியிருப்பு அருகே தனது டூ வீலரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள இறைச்சி கடைக்கு சென்று இறைச்சியை வாங்கிக்கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது டூ வீலர் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் தனது டூவீலர் குறித்து விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால், இது குறித்து தனது டூவீலரை காணவில்லை என அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,டூ வீலரை களவாடிய நபர், நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளி பாளையம் அருகே உள்ள கோடமுடையார் காலனி பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் மகன் முகமது அசாருதீன் வயது 26 என தெரிய வந்துள்ளது. மேலும், களவாடப்பட்ட அந்த டூவீலரின் மதிப்பு ரூபாய் 90 ஆயிரம் என மதிப்பீடு செய்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, களவாடி சென்ற நபர் மற்றும் டூவீலரை தேடி வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story