தென்னிலை அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.

டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.

தென்னிலை அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், எரப்பட்டி, தாஜ் தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் அஜய் சந்தோஷ் வயது 22. இதே போல, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சின்னதாராபுரம் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் வயது 26. இவர்கள் இருவரும் டூவீலரில் கடந்த நவ. 18 ஆம் தேதி மதியம் கோவை- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிலை கடைவீதி அருகே வந்த போது, கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், எவ்வித சிக்னலும் காட்டாமல், முன்னால் வேகமாக சென்று வலதுபுறம் டூவீலரை திருப்பிதால், பின்னால் வந்த அஜய் சந்தோஷ் வாகனம் சந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள், அஜய் சந்தோஷ் ஐ கரூர் அமராவதி மருத்துவமனைக்கும், டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ஜீவானந்தத்தை கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஜய் சந்தோஷ் தென்னிலை காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விபத்து ஏற்பட காரணமான சந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story