ராமசாமி நகர் அருகே டூவீலர்கள் மோதல் - ஒருவர் படுகாயம்.
காவல் நிலையம்
கரூர் எல்.என்.எஸ் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் திண்டுக்கல்- கரூர் சாலையில் இவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். டூ வீலர் ஜெயபுரம் ராமசாமி நகர் அருகே வந்தபோது, எதிர்திசையில் டூவீலரில் வந்த நபர் வேகமாகவும், கவனக்குறைவாகவும் டூவீலரை ஓட்டி, பிரகாஷ் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பிரகாசுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
Tags
Next Story