நாகர்கோவில் கேட்பாரற்று நின்ற டூவீலர்கள் பறிமுதல்
நாகர்கோவில் நகர்ப்பகுதியில் ஆங்காங்கே ரோட்டோரத்தில் கேட்பாரற்ற நிலையில், மாதக்கணங்கில் டூவீலர்கள் தொடர்ந்து இருப்பதால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பைக்குகள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சில வாகனங்கள் கேட்பாரற்ற நிலையில் வருட கணக்கில் ஒரே இடத்தில் நிற்கிறது. இது போன்ற வாகனங்களை பொதுமக்கள் புகாரின் பேரில் போலீசார் கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில் திலகர் தெரு, நாகராஜா கோயில் தேரடி, கணபதி நகர் பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் பல மாதங்களாக நின்ற நான்கு பைகளை டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பைக்குகளை நாகர்கோவில் கோட்டாரில் உள்ள டிராபிக் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதன் பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் இரண்டு பைகள் வெளி மாநில பதிவுகள் கொண்டதாகும். இது திருட்டு பைக்குகளா? என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story