டூவீலர்கள் திருட்டு - சேலத்தில் துணிகரம்

X
பைல் படம்
சேலம் சூரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் காசக்காரனூரை சேர்ந்த கனகராஜ் மகன் ஜீவா. இவர் வீட்டு முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு போன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் பூவரசன் (வயது 24), கட்டிட தொழிலாளி. இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
