பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி

பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி

பலியான வாலிபர் 

குரும்பூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள குழைக்கநாதபுரத்தில் கட்டேறும் பெருமாள் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவானந்தம் (22) செந்தூர் பாண்டி மகன் பிரதீப் குமார் (20) ஆகிய இருவரும் கொடை விழாவுக்கு சென்றுவிட்டு கிராமத்திற்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அங்குள்ள வணிக வளாகம் அருகில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story