சிவகாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

சிவகாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

சிவகாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வம்பிழுத்தான் முக்கு பகுதியிலுள்ள பள்ளப்பட்டி ரோட்டில் இரண்டு பேர் கஞ்சா விற்பனை செய்வதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில், காவல் துறையினர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில்,

முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சாமுவேல் (21) மற்றும் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் குமார் (19) ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து மறைவான இடத்தில் வைத்து,

கஞ்சா செய்து வந்தவர் பிடித்து சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் ரொக்க பணத்தையும் கைப்பற்றிய கிழக்கு காவல் நிலைய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story