மாணவ, மாணவிகளுக்கு தட்டச்சு தேர்வு

மாணவ, மாணவிகளுக்கு தட்டச்சு தேர்வு

தட்டச்சு தேர்வு

சேலம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தட்டச்சு தேர்வு - 8,000 பேர் பங்கேற்பு
தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசு பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஏராளமான மாணவ, மாணவியர், தட்டச்சு கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால், ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தட்டச்சு தேர்வு நேற்று நடந்தது. சி.எஸ்.ஐ., தியாகராஜர், கோட்டை மாரியம்மன், சேலம், காவேரி, மேட்டூர் எம்.ஐ.டி., வனவாசி அரசு உள்ளிட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில், 8,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பயிற்சி பெற்ற பள்ளிகள் மூலம் தட்டச்சு தேர்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story