ஆயர் தாவீது சிறுவர் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

ஆயர் தாவீது சிறுவர் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

உதயநிதி பிறந்தநாள் விழா 

போளூர் அடுத்த சேத்துப்பட்டு டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆயர் தாவீது சிறுவர் இல்லத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சேத்துப்பட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சேத்துப்பட்டு தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆயர் தாவீது சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் அருண் தலைமை தாங்கினார். அனைவரையும் விடுதிக் காப்பாளர் தாமஸ் வரவேற்றார்.உதவி பங்கு தந்தை சதீஷ் ஏசுராஜ், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பள்ளி மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த பள்ளி அளவிலும் ,வட்ட அளவிலும் ,மாவட்ட அளவிலும் ,மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டிகளையும் ,கலைத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களின் உந்து சக்தியை வெளிக்கொணந்துள்ளார். பள்ளி மாணவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் அயராது பாடுபடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் எங்கள் இல்லத்தில் கொண்டாடுவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் என பெருமிதமாக பேசினார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் கே.வி. ராஜ்குமார் ,திமுக நகர செயலாளர் இரா முருகன் ஆகியோர்கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் திமுக நகர துணை செயலாளர்கள் வேளாங்கண்ணன் ஜெயந்தி ராமகிருஷ்ணன்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் புனிதா பன்னீர்செல்வம் நற்பணி மன்றத்தை சார்ந்த வினோத் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story