திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

அமைச்சர் உதயநிதி


திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

திண்டுக்கல்லில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு, மேயர் இளமதி முன்னிலையில், மாநகர செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல செயலாளர்கள் ஜான் பீட்டர், ஆனந்த், மாநகர துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் சரவணன், பகுதி கழக செயலாளர்கள், ராஜேந்திர குமார், சந்திரசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் கிருபாகரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story