திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் !
திமுக
தர்மபுரி திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
மேலும் திமுக அரசின் நல திட்டங்களான அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள். முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது எனவே தர்மபுரி திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார்.
தர்மபுரி சிப்காட் பணிகள் சாலை வசதி செய்து தரப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டாவது கட்டப் பணிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . தர்மபுரி டு மொரப்பூர் ரயில்வே திட்டப் பணியில் நிறைவேற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது மாணவரணி அமைப்பாளர் எம்பி பெரியண்ணன் சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர் நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் பாலசுப்பிரமணி மற்றும் காட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.