தூத்துக்குடிக்கு உதயநிதி வருகை - சிறப்பான வரவேற்பளிக்க முடிவு

தூத்துக்குடிக்கு உதயநிதி  வருகை - சிறப்பான வரவேற்பளிக்க முடிவு

திமுக கூட்டம் 

திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய குழு முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு அளிப்பது தொடர்பான கூட்டம் கிழக்கு ஒன்றிய இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காரியாலய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடிக்கு இன்று வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க வேண்டும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டேவிஸ் புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

அந்த இடத்திற்கு லட்சக்கணக்கான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வருகை தந்து வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க வேண்டும். மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள 41 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன ஒரு பூத்துக்கு ஒன்பது பூத்கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் சுமார் 900 வாக்காளர்கள் கொண்ட ஒரு பூத் பகுதியிலுள்ள வாக்காளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் மாப்பிள்ளையூரணி பகுதியில் மட்டும் சுமார் 30,000 வாக்குகளுக்கு மேல் கனிமொழி கருணாநிதி அவர்களின் வெற்றிக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, அரசு வழக்கறிஞர் பூங்குமார், தேர்தல் பொறுப்பாளர் சுதா ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, மகளிர் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய கவுன்சிலர் சேவியர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் சிலுவைப்பட்டி பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story