பிரதமர் குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை-ஜான் பாண்டியன்

பிரதமர் குறித்து பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

விளையாட்டுப் பிள்ளை விளையாட்டுத்தனமாக பேசுகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் சின்ன வயசு அவருக்கு புரியவில்லை. பிரதமர் குறித்து பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை. இதுகுறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் பேட்டியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தென்காசி பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான ஜான் பாண்டியன் சாமி தரிசனம் செய்தார் - பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாமரை மலரும். இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

அனைத்து பகுதிகளுக்கு சென்று வரும்போது அனைத்து மக்களும் மகிழ்ச்சியோடு எழுச்சி எழுச்சியோடு இதுபோன்று வேட்பாளரை கண்டதில்லை அதனால் நிச்சயமாக உங்களுக்கு வாக்களிப்போம் என உறுதி கூறுகின்றனர். உலக தரத்தில் முதன்மை மாவட்டமாக தென்காசியை கொண்டுவருவதற்கு முயற்சி செய்வேன். அனைத்து பகுதிகளும் புதிய ஆலைகள் கொண்டுவர முயற்சி செய்யப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆலைகள் எல்லாம் மூடியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை சரி செய்யப்படும். தென்னை மரங்களில் வரும் காய்கள் பல வீணாகிறது. எனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் நார் தொழிற்சாலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட முன்னேற்றக் கழகம் செய்த சதியினால் மக்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் பேர்வழிகளை அழிப்பதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சி இணைந்து தமிழகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக அனைத்து பகுதிகளும் வெற்றி கிட்டும். திமுக மக்களுக்கு செய்த துரோகச் செயல்கள், பொய் வாக்குறுதிகளை சொல்லி உண்மை நிலையை எடுத்துக் கூறி மக்களுக்கு சேவை செய்வேன்.

தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். உலக பிரசித்தி பெற்ற குற்றாலத்தில் சுகாதாரம் மேம்படுத்தி, ஹைடெக் நகரமாக கொண்டு வரப்படும். விவசாய பெருங்குடி மக்கள் எலுமிச்சை சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். குளிர்பதன சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தப்படும். இதனால் அவர்களுக்கு பொருளாதாரம் உயரும். ராஜபாளையத்தில் பல ஆலைகள் மூடி உள்ளது. அதை திறப்பதற்கு மத்திய அரசிடம் பேசி தேவையான சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மட்டும் மோடி அரசால் 57 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகமாக கட்டுப்படுவதற்கு மோடி திட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று சேவை செய்ய காத்திருக்கிறேன். ஏழை எளியவர்கள் சாப்பிடுவதற்கு கூட முடியாமல் இருந்த நிலையில் 5 கிலோ அரிசி ரேஷன் கடை மூலம் மத்திய அரசு வழங்குவதை 67 லட்சம் பேர் வாங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னும் அதிகப்படுத்தி ஏழைகளை இல்லாத மாநிலமாக உனுவாக்கப்படும். தென்காசி மாவட்டத்தை மேம்படுத்த கூடுதல் சலுகைகள் பெற்றுத் தரப்படும். 4 முனை போட்டி என்பது கிடையாது. பாஜக - திமுக மட்டுமே இரண்டு முறை போட்டி. மற்றவை குறித்து தெரியவில்லை. பிஜேபிக்கு தான் வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, விளையாட்டுப் பிள்ளை விளையாட்டுத்தனமாக பேசுகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் சின்ன வயசு அவருக்கு புரியவில்லை. பிரதமர் குறித்து பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை. இதுகுறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.என்றார். பேட்டி: ஜான் பாண்டியன் (பாஜக வேட்பாளர்)

Tags

Next Story