உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் - கம்மாபுரத்தில் நலத்திட்ட உதவிகள்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பாக பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் வழங்கினார். உடன் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திருமாவளவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கே. பி. ஆர். பாலமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story