நகர செயலாளருக்கு தங்க மோதிரம் அணிவித்த உதயநிதி

நகர செயலாளருக்கு தங்க மோதிரம் அணிவித்த உதயநிதி

தங்கமோதிரம் அணிவித்த உதயநிதி 

சேலம் இளைஞர் அணி மாநாட்டிற்கு 1500 இளைஞர்களை திரட்டிய இடங்கணசாலை திமுக நகர செயலாளர் செல்வத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்தார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அயராது உழைத்து சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகர திமுக சார்பில் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒன்று திரட்டி மாநாட்டுக்கு அழைத்துச் சென்ற இடங்கணசாலை திமுக நகர செயலாளர் செல்வத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 சவரன் தங்க மோதிரம் வழங்கினார். அப்போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி உள்ளிட்ட பலரும் உடனிந்தனர்.

Tags

Next Story