உடுமலைப்பேட்டை: தனியார் விடுதிக்கு சீல் வைப்பு!

உடுமலைப்பேட்டை: தனியார் விடுதிக்கு சீல் வைப்பு!

சீல்வைப்பு

உடுமலைப்பேட்டை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தனியார் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முகாமாக இருந்த தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து கடந்த 15-ம் தேதி தனியார் விடுதி மேலாளர் சாமுவேல் (வயது 60) கைது செய்யப்பட்டார். அத்துடன் போலீஸ் சார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனியார் விடுதி நிர்வாகம் முறையாக விசாரணை செய்யாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் தங்குவதற்கு அனுமதி அளித்து சட்டவிரோத செயலுக்கு உறுதுணையாக இருந்ததாக காவல்துறை மற்றும் வருவாய் துறை அறிக்கையின் அடிப்படையில் தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து தனியார் விடுதியை பூட்டி சீல் வைக்க உடுமலை தாசில்தார் சுந்தரம் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று உடுமலை ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், போலிஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்தனர்.

Tags

Next Story