கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்


கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பொன்னி தனியார் சர்க்கரை ஆலை முன்பு ,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.துரைசாமி, சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, கரும்பு வெட்டும் சங்க செயலாளர் குருசாமி, மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக , கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ₹4000 வழங்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு உடல் பாதுகாப்புடன் கூடிய சீருடை ரப்பர் ஷூ இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் பொழுது ஏற்படும் விபத்திற்கும் மருத்துவ செலவினத்திற்கும் ஆலை நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை ஆலை நிர்வாகம் தங்களுடைய பங்குத் தொகையாக செலுத்தி காப்பீட்டு தொகையை உறுதி செய்ய வேண்டும்! கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்! கரும்பு வெட்டும் பொழுது விஷப்பூச்சிகளால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண உதவி தமிழக அரசு வழங்க வேண்டும்.

வெளியூரிலிருந்து கரும்பு வெட்டு வரும் தொழிலாளர்கள் தங்குவதற்கு சுகாதாரமான குடியிருப்பு வசதிகளை ஆலை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்! முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலமாக தொழிலாளர் கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.. திரளான தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story