புதர் மண்டி இருக்கும் உள்ளாவூர் ஏரி நீர்வரத்து கால்வாய்

புதர் மண்டி இருக்கும் உள்ளாவூர் ஏரி நீர்வரத்து கால்வாய்

ஏரிக்கான நீர்வரத்து கால்வாயை துார்வாரி பராமரிப்பு பணி செய்ய அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


ஏரிக்கான நீர்வரத்து கால்வாயை துார்வாரி பராமரிப்பு பணி செய்ய அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. மழைக் காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.உள்ளாவூர் அடுத்த, வரதாபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வரத்து கால்வாய் வழியாக உள்ளாவூர் ஏரிக்கு சென்றடைகிறது. இதனால், உள்ளாவூர் ஏரி நிரம்ப இக்கால்வாய் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், உள்ளாவூர் ஏரிக்கான இந்த நீர்வரத்து கால்வாய், பல ஆண்டுகளாக துார்வாராததால், புதர்கள் வளர்ந்து துார்ந்து காணப்படுகின்றன. இதனால், ஏரிக்கு தண்ணீர் வந்து சேகரமாவதில் சிக்கல் உள்ளது. எனவே, உள்ளாவூர் ஏரிக்கான நீர்வரத்து கால்வாயை துார்வாரி பராமரிப்பு பணி செய்ய அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story