உளுந்துார்பேட்டை : குட்கா விற்றவர் கைது

உளுந்துார்பேட்டை : குட்கா  விற்றவர் கைது

காவல் நிலையம் 

உளுந்துார்பேட்டை அடுத்த மட்டிகை கிராமத்தில் உள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மட்டிகையில் உள்ள கடையில் சோதனை செய்தனர். இதில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதுதெரியவந்தது. புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து வாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அய்யப்பனை, 32; கைது செய்து,குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story