மாணவர்கள் நடத்திய உழவன் உழவர் சந்தை

மாணவர்கள் நடத்திய உழவன் உழவர் சந்தை

மாணவர்கள் நடத்திய உழவன் உழவர் சந்தை


சேத்துப்பட்டு அடுத்த கோழிப்புலியூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நடத்திய உழவன் உழவர் சந்தையை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பார்வையிட்டார்.

நடப்பு பருவ பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பொருளியல் என்ற பாடமும், தமிழில் வளரும் வணிகம் என்ற பாடமும், கணிதத்தில் ரூபாய் மற்றும் கூட்டல் கழித்தல் போன்ற பாடங்கள் உள்ளது. மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பித்தலை விட நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன் கோழிப்புலியூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 6ம் வகுப்பு மாணவர்கள் ஒரு நாள் உழவன் உழவர் சந்தை அமைத்திருந்தனர்.

பள்ளி மாணவர்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், நெல்லிக்காய், கொய்யா, முட்டைகள், தேங்காய், வேர்க்கடலை, சுண்டல் போன்ற பொருள்களை உழவன் உழவர் சந்தையில் வைத்து விற்பனையை தொடங்கினர். இதனை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், பஞ். தலைவர் சந்தோஷ் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு உழவர் சந்தையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதன் மூலம் மாணவர்கள் இயல்பான முறையில் வணிகம் செய்யும் முறையை கற்றுக்கொண்டனர். உழவர் சந்தை அமைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் முரளி, ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story