பராமரிப்பின்றி கிடக்கும் பயணியர் நிழற்குடை

பராமரிப்பின்றி கிடக்கும் பயணியர் நிழற்குடை

செருக்கனுார் கூட்டுச்சாலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் பயணியர் நிழற்குடை பாழாகும் சூழல் நிலவுகிறது.

செருக்கனுார் கூட்டுச்சாலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் பயணியர் நிழற்குடை பாழாகும் சூழல் நிலவுகிறது.

திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், செருக்கனுார் கூட்டுச்சாலையில் இருந்து, தினமும் ஏராளமானோர் பேருந்துகள் வாயிலாக, திருத்தணி மற்றும் சோளிங்கர் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு பேருந்து நிழற்குடை இல்லாமல் பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் பயணியரின் நலன் கருதி, அப்போதைய அரக்கோணம் எம்.பி., கோ.ஹரி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன நிழற்குடை அமைத்து பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த நிழற்குடையை முறையாக பராமரிக்காததால், தற்போது நிழற்குடை சுற்றியும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், நிழற்குடைக்கு செல்வதற்கு போதிய வழியும் இல்லாததால், பயணியர் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இங்கு, பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தாமல் செல்கின்றன.

அரசு டவுன் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. பராமரிப்பு இல்லாமல் வீணாகி வரும் பேருந்து நிழற்குடையால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. எனவே, முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள பேருந்து நிழற்குடையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story