அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு - போலீசார் விசாரணை
காவல் நிலையம்
கல்லல் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லல் ஒன்றியம் கீழையப்பட்டி விநாயகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு காளைகள் தொழுவிலிருந்து அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடித்தவர்களுக்கும், பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடு பிடிக்க முயன்றதில் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். முன்னதாக தொழுவிற்கு வெளியிலும் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்க்கப்பட்டன. இந்நிலையில் அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story