அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவர் கைது - வாகனம் பறிமுதல்
டிராக்டர் பறிமுதல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தக்குடி -பாபநாசம் சாலையில் முறையான அரசு அனுமதி இன்றி டிராக்டர் மூலமாக மணல் ஏற்றிய கோவிந்த குடி மெயின் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் விநாயகமூர்த்தி 50., என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story