தேனூர் பகுதியில் அனுமதி இன்றி சுவர் விளம்பரங்கள்: பொதுமக்கள் புகார்
தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் தொகுதி தேனூர் ஊராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பகுதியில் அனுமதி இன்றி சுவர் விளம்பரங்கள் மற்றும் வால் போஸ்டர்கள் ஓட்டுவதாக திமுகவினர் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் வீட்டு சுவர்களில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை வரைந்து உள்ளதாகவும் தேனி திமுக வேட்பாளர்தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு வால்போஸ்டர்கள் ஒட்டி இருப்பதாகவும் தேனூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு தனியார் மற்றும் அரசு சுவர்களில் வரையப்பட்டுள்ள சின்னங்கள் மற்றும் வால் போஸ்டர்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என விசாரித்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் புகார் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தனர்