சடங்கு சம்பிரதாயங்களற்ற திருமணம்

சடங்கு சம்பிரதாயங்களற்ற திருமணம்

திருமண விழா

பள்ளிபாளையத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் ஏதும் இன்றி நடைபெற்ற கம்யூனிஸ்ட் நிர்வாகி இல்ல திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது .
நாமக்கல் மாவட்ட மாதர் சங்க மாவட்ட செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினருமான ஆர்.அலமேலு, ராஜேந்திரன் இல்ல திருமண நிகழ்வு பள்ளிபாளையம் பழனியப்பன் பாவாயம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சடங்கு சம்பிரதாயங்களை தவிர்த்து, கட்சி திருமணமாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தலைமை தாங்கி மணமக்களான ஆர்.கதிர்வேல் ,எஸ்.ஆர்.நிவேதா ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ரங்கசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன்,என கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story