அட்மா திட்டத்தின் கீழ், கலாச்சதா தெருமுனை கூட்டங்கள்

அட்மா திட்டத்தின் கீழ், கலாச்சதா தெருமுனை கூட்டங்கள்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பம் குறித்த தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது


பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பம் குறித்த தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் துறை, அட்மா திட்டத்தின் கீழ், கலாச்சதா தெருமுனை கூட்டங்கள் மூலமாக தொழில் நுட்பங்களை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) அப்சரா துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி பட்டுக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட ஆலடிக்குமுளை, கரம்பயம், எட்டுப்புளிக்காடு, திட்டக்குடி, சூரப்பள்ளம், துவரங்குறிச்சி, தம்பிக்கோட்டை வடகாடு, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முதல்சேரி மற்றும் பல கிராமங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம், வேளாண் தொழில்நுட்பக் கருத்துக்களை, கலை நிகழ்ச்சி வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கிசான் அட்டை பெறுவது, மண் மாதிரி சேகரிப்பு, மற்றும் உழவன் செயலி பதிவேற்றம் செய்வது தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கி அவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினார்.

கலாச்சதா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அமிர்த லீலியா மற்றும் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story