வெம்பக்கோட்டையில் அகழாய்வில் அகல் விளக்கு கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் அகழாய்வில் அகல் விளக்கு கண்டெடுப்பு
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அகழாய்வில் அகல் விளக்கு கண்டெடுப்பு...
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அகழாய்வில் அகல் விளக்கு கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைப்பெற்ற 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் 3254 தொல் பொருட்களும் 2-ம் கட்டத்தில் 4660 பொருட்கள் என இதுவரை 7914 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டு தொன்மையான மனிதர்கள் இங்கு சங்கு வளையல் தயாரிக்கும் தொழில் கூடம், கண்ணாடி மணிகள் தயாரிப்பு கூடம் அமைந்திருந்தது,வைப்பாறு வழியாக கடல்வழி வாணிபம் மேற்கொண்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ள நிலையில்.3-ம் கட்ட அகழாய்வு அகழாய்வில் இன்று அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல் விளக்கு சுடுமன்னாளான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய் சில்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.மேலும் பல உண்மையான மனிதர்களின் வரலாற்று சிறப்புகளை அறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story