மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி : மேயர் ஆய்வு

மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி : மேயர் ஆய்வு

மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகளில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "பாதாள சாக்கடையானது தற்பொழுது பல பகுதிகளில் வீடுகளுடன் இணைக்கப்பட்டு வெற்றிகரமாக நீரானது வெளியேற்றப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ராஜகோபால் நகர் பிரதான சாலை மற்றும் அந்த நகரை சுற்றியுள்ள உள்ள 2000-க்கும் மேற்பட்ட வீடுகளை தற்போது பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதுபோன்ற பணிகளினால் மாநகரம் மேலும் தூய்மை மிகு நகரமாக மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார். ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் கனகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் வான்மதி, திமுக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story