ராஜபாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம்

ராஜபாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை வசதிகள் விரைவில் முடிக்கப்படும் வருவாய் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
ராஜபாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை வசதிகள் விரைவில் முடிக்கப்படும் வருவாய் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது போக்குவரத்து நெரிசலில் இருந்து தவிர்க்கவும் பள்ளி மற்றும் கல்லூரி ,அலுவலக, செல்லக்கூடிய பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே மேம்பாலம் தேவையாக இருந்ததால் கடந்த ஆட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் கோரிக்கை வைத்தார்.

அதை அடுத்து அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் இந்த மேம்பாலத்திற்காக 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது . கடந்த ஐந்து ஆண்டுகளாமாக பணிகள் நடைபெற்று.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவுற்றது இன்று ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் யூனியன் சேர்மன் சிங்கராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாலத்தை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் . பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவை தாமதமாக நடைபெறுவதால் மக்கள் அவதியில் உள்ளனர் கேள்வி எழுப்பியதற்கு. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

அதேபோல் தென்காசி தேசிய நெடுஞ்சாலை பணிகளும் விரைந்து முடிக்கப்படும் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் சாலைகளை பேஜ் ஒர்க் செய்யாமல் சாலைகள் முழுவதுமாக போடப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story