பட்டுக்கோட்டை நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

பட்டுக்கோட்டை நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

மேயர்


பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் உறுதியளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் நகர மக்களின் தேவைகளுக்காக செய்த பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவரான பிறகு நகரை மேம்படுத்த நகராட்சி அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்து சுகாதார பணிகளை நேரடியாக ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, பணியில் தொய்வில்லாமல், அவர்களது அயராத உழைப்பால் தூய்மையான நகரமாக பட்டுக்கோட்டை இருந்து வருகிறது.

மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் தினசரி கண்காணிக்கப்பட்டு 2 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. கா.அண்ணாதுரையுடன் இணைந்து பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நகரத்தின் எதிர்கால குடிநீர் தேவையை மேம்படுத்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவர தமிழக முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் பட்டுக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், 15வது நிதி ஆணையம். 15வது மத்திய நிதிக்குழு, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதி திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், பொது நிதி, 6 ஆவது எஸ்எப்சி நிலுவை தொகை, ஆம்ரூட் 2.0 திட்டங்களின் மூலம் ரூ. 4865,42 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வருக்கும். திட்டங்கள் கொண்டு வருவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்துக்கும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Tags

Next Story