சுடுகாடு பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

சுடுகாடு பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
சிறைபிடித்து போராட்டம்
சுடுகாட்டு பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை மருதூர் பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டை மருதூர், கிழக்கு சண்முகபுரம் காலனி, தெற்கு ரெயில்வே காலனி, காலேஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப் பதற்காக நேற்று, அங்குள்ள கல்லறைகளை இடித்து அங்குள்ள மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதையறிந்ததும் அப்பகுதி மக்கள், விவசாயிகள், இதுபற்றி அ.தி.மு.க. நகர செயலா ளர் பசுபதிக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அவரது தலைமையில் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர்.

மேலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பொக்லைன் எந்திரத்தின் மூலம் கல்லறைகளையும், மரங்களையும் அகற்றியதால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் மற்றும் அப்பகுதி மக்கள், விவசாயிகள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து நகராட்சி ஊழியர்கள் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில் எவ்வித அறிவிப்புமின்றி விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கின்ற வகையில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கின்ற பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட் டோம் என்றனர். இதுபற்றி அ.தி.மு.க. நகர செயலாளர் பசுபதி கூறும்போது, இப்பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்படும். அதனை மீறியும் பணிகள் ஏதேனும் நடைபெற்றால் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags

Next Story