ஆவணமில்லாத ரூ.4.65 லட்சம் பணம் பறிமுதல்
பூந்தமல்லியில் வெவ்வேறு இடங்களில் ஆவணமில்லாததால் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பூந்தமல்லி அடுத்த கீழ்மனம்பேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதே போல் கோலப்பன்சேரி பகுதியில் ஒரு எ ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் எடுத்து வரப்பட்ட ரூ.90 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ரூ.4,65,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..