நாகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகைபெற விண்ணப்பிக்கலாம்

நாகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகைபெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகைபெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகைபெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 01.01.2024 முதல் 31.03.2024 வரை 31.12.2023 , அன்றைய தேதியில் இருந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பள்ளியிறுதி வகுப்பு தோல்வி / பத்தாம் வகுப்பு தேர்ச்சி / பன்னிரெண்டாம் வகுப்பு. பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பொது பிரிவினருக்கும் கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவர்.

வேலைவாய்ப்பற்ற பயன்பெறுவோர்கள் இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1.ஆண்டு வருமானம் ரூ.72,000/- (பொதுவானவர்களுக்கு) இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது. 2.வயது வரம்பு தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 45 வயதுக்குள் இருத்தல்வேண்டும். இதர வகுப்பினர்களுக்கு 40 வயதுக்குள் இருத்தல்வேண்டும்.

3.உதவித்தொகை பெற விரும்புவோர் தினசரி பள்ளி / கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது. 4.உதவித்தொகை பெற விரும்புவோர் அரசு அல்லது தனியார் துறையிலோ பணிபுரிபவராக இருத்தல் கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுள்ள மனுதாரர்கள்

https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலக வேலை நாட்களில் அலுவலத்திலும் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்றுவரும் பயன்தாரர்கள் 2023-24 ஆண்டிற்கான சுயஉறுதி மொழி ஆவணங்களை மார்ச்-2024-க்குள் அளிக்கும்படி காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலமாக வேலையளிப்போர்களையும், வேலை நாடுநர்களையும் இணைக்கும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள "Tamilnadu Private Job Portal" www.tnprivatejobs.tn.gov.i இணையத்தளத்தில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற பதிவு செய்து பயன்பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story