ரயில்வே இருப்பு பாதையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். ரயில்வே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில் ரயில்வே நிறுத்தம் அமைந்துள்ளது. சேலம், கோவை, கேரளா, பெங்களூர்,சென்னை என பல்வேறு மாநிலங்களுக்கு இந்த ரயில்வே இருப்பு பாதை வழியாக ரயில்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு பெங்களூர் மார்க்கமாக செல்லும் ரயில்வே இருப்பு பாதையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கால்கள் இரண்டும் துண்டான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக இருந்தார்.
மேலும் முதியவரின் ஒரு கால் பகுதி முதியவர் சடலம் இருந்த பகுதியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் தனியே கிடந்தது . இரவு நேரத்தில் ரயில்வே இருப்புப் பாதையை கடக்கும் முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்திருக்கலாம். அந்த நேரத்தில் வந்த ரயில் மோதி அவர் உயிரிழந்திருக்கலாம் என ரயில்வே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதியவர் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..