தங்குதடையின்றி குடிநீர் விநியோகம்: ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர்
கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் முன்னிலையில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரா.ஆனந்தகுமார் முன்னிலையில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அடுத்து வரும் சில நாள்களிலும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம்,
சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத் துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது. கோ
டை காலத்தில் சரும பாதிப்புகள், உடல் சோா்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது. இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று ஓஆா்எஸ் கரைசலை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், ஓ.ஆர்.எஸ். கரைசல் பொடிகளும் கையிருப்பில் உள்ளன. இதைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அவற்றை மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகர பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாகவும், ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையங்கள் மூலமாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு,
சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை மின்சார வாரிய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் இந்த கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.