பருவதமலை கிரிவல பாதையை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆய்வு
பருவதமலை கிரிவல பாதை ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பருவத மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆய்வு செய்து பேசியதாவது, மாவட்ட ஆட்சியர் கூறியது போல் அனைத்து இடங்களிலும் கழிவறை வசதி , குடிநீர் வசதி அனைத்தும் தரமாக இருக்க வேண்டும். சாலைகள் அனைத்தும் 100 நாள் பணியாளர்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்ய வேண்டும். கிரிவலம் பாதையில் உள்ள ஊராட்சிகளில் அரசு சுகாதார கழிவறை கட்டிடங்களை சுத்தம் செய்து, அதன் மூலம் மக்கள் கிரிவலம் பயணிக்கும் போது பயன்படுத்துவதற்கு அனைத்து வசதிகளும் தயாராக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியும் தயாராக இருக்க வேண்டும். சாலைகள் அனைத்தும் கிரிவலம் முடியும் வரை சாலைகள் சுத்தமாக அமைத்துக் கொடுக்க வேண்டும். இத்தனை பணிகளும் கிரிவலப்பாதையில் உள்ள 26 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் சரியாக செய்து கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தென்மகாதேவமங்கலம், கோவில்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், கடலாடி, மேல்பாலூர், வீரலூர் மேல்சோழங்குப்பம்,காந்தபாளையம், கெங்கலமகாதேவி, சீராம்பாளையம், ஆகிய ஊராட்சிகள் தூய்மை பணியை அதிகமாக அமைத்து கொடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஆய்வு செய்த போது கூறினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஓவர்ஸ்சி வாசுகி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Next Story