பொன்னமராவதியில் ஒன்றிய குழு கூட்டம்!

பொன்னமராவதியில் ஒன்றிய குழு கூட்டம்!

பொன்னமராவதியில் ஒன்றிய குழு கூட்டம்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலம் மணி தலைமை வகித்தார்.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலம் மணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.வீரையன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒளியமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் சிவரஞ்சனி, வினோத் பேசுகையில் மிகவும் சேதம் அடைந்து காணப்படும் ஒளியமங்கலம் சுந்தம்பட்டி சாலை ஒலியமங்கலம் சேர்வாரம் பட்டி சாலை உள்ளிட்ட சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதமர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்றார். தொடர்ந்து வரவு, செலவு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அடைக்கலமணி, பழனியாண்டி, பழனியப்பன், கல்யாணி, மணி, மாணிக்கம், பிரியங்கா, வளர்மதி, அழகு ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story