இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம்

நாமக்கல் மாவட்டம்,பெரியமணலியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியகுழு கூட்டத்திற்கு, ஒன்றிய துணைச்செயலாளர் யுவராஜ் தலைமை வகித்தார். இதில், நாளை மறுநாள் பெரியமணலி பஸ்நிறுத்தத்தில் இலவச வீட்டுமனை வேண்டி, கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும். ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் பிப்.16ல் நடக்கும் நாடுதழுவிய மறியல் பேராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். பெரியமணலியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். மேட்டூர் உபரிகாவிரிநீரை திருமணிமுத்தாற்றுடன் இணைக்க வேண்டும்.

பெரியமணலி, பண்ணாரியம்மன் நகர், கோட்டபாளையம், அத்திக்காடு பகுதிகளில் மின்விளக்கு மற்றும் தார்சாலை அமைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அன்புமணி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் கார்த்தி, நவக்கொடி, ஜெயராமன், பழனிசாமி, செங்கோட்டுவேலு, குப்புசாமி, மணிகண்டன், சரவணன், ராஜீ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story